திருப்புவனத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
திருப்புவனத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சத்தியமங்கலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இவருக்கு பாராட்டு விழா மடப்புரத்தில் உள்ள அரியவா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதுநிலை முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் மாணவ-மாணவிகள், பெற்றோர், ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். விழாவில் தங்க பதக்கம் பெற்ற கிருஷ்ணமூர்த்தியை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் முதல்வர் கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story