சுப்பிரமணியசாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.12¼ லட்சம்
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் உண்டியல் வருமானம் எண்ணப்பட்டது. அதில் ரூ.12¼ லட்சம் கிடைத்தது.
காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
முன்னதாக கடந்த மாதம் 29-ந் தேதி 11 தற்காலிக உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.4 லட்சத்து 54 ஆயிரத்து 746 மற்றும் 2 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை ரத்தினகிரி கோவில் செயல் அலுவலர் சங்கர், குடியாத்தம் ஆய்வாளர் பாரி, கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் கோவிலில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ரூ.12 லட்சத்து 37ஆயிரத்து 644 மற்றும் 129 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.