விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரம்


விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரம்
x

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண் எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு 5 விவசாயிகளுக்கு தலா ரூ.85 ஆயிரம் மதிப்பில் அரசு மான்யத்தில் பவர் டில்லர் எந்திரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜி, வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் ரூபன் குமார், உதவிப் பொறியாளர்கள் ரவிக்குமார், சுவர்ணலட்சுமி, இளநிலைப் பொறியாளர் பா.சரவணன், அம்முண்டி சர்க்கரை ஆலை சங்க தலைவர் வெங்கடேசன், நகரமன்ற உறுப்பினர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மொத்தம் 117 பவர் டில்லர், 4 பவர் வீடர் வழங்கப்பட்டுள்ளது. இதனுடைய மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 62 லட்சம் என்றும் அரசு மானியம் ரூ.1 கோடியே 20 ஆயிரம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story