விவசாயிகளுக்கு மானியத்தில் பேட்டரி ஸ்பிரே கருவி


விவசாயிகளுக்கு மானியத்தில் பேட்டரி ஸ்பிரே கருவி
x

விவசாயிகளுக்கு மானியத்தில் பேட்டரி ஸ்பிரே கருவி வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

திமிரி வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திமிரி வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பேட்டரி ஸ்பிரே மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் கருவி, பண்ணை கருவிகள், நெல் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணீர் ஊட்டங்கள் போன்ற பொருட்கள் திமிரி வேளாண்மை அலுவலகத்திலும் கலவை வேளாண்மை அலுவலகத்திலும் இருப்பு உள்ளது.

விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு உழுது விவசாயிகள் பயனடையலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story