ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
காவேரிப்பாக்கம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
வேளாண்மை உதவி இயக்குனர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நலன் பெறும் வகையில் காவேரிப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் பாணாவரம் துணை வேளாண்மை விரிவாக்க மையம் ஆகியவற்றில் 2022-23 ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பை மேற்கொள்ள ரூ.2ஆயிரம் மானியத்தில் விசைத்தெளிப்பான்கள் வழங்கப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தில் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மற்றும் அசோபாஸ் திரவ உயிர் உரங்கள் 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படுகிறது.
இது தவிர மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை எந்திர தொகுப்பு (கடப்பாரை, மண் வெட்டி, தாலா, அரிவாள் மற்றும் களைக்கொத்தி) 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கடலை பயிருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஜிப்சம் மூட்டை, ரூ.108 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான்கள் ரூ.2000 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.