விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், நுண்ணூட்ட பொருட்கள்


விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், நுண்ணூட்ட பொருட்கள்
x

விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், நுண்ணூட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- வேப்பந்தட்டை வட்டாரத்தில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே வேப்பந்தட்டை வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் நீண்ட இலை பருத்தி ரகங்களான சுரபி, சுரஜ் போன்ற பருத்தி விதைகள் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பருத்திக்கு ஏற்ற சிறுதானியங்களான வரகு, சோளம் போன்ற ரகங்களும், உளுந்து, கடலை போன்ற விதைகளும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, செங்கல்பட்டு சிறுமணி போன்ற மத்திய கால வயதுடைய நெல் ரகங்களும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பயிரின் வளர்ச்சியையும், மகசூலையும் பாதிக்கக்கூடிய நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையை போக்க நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக்கொல்லியான டிரைக்கொடர்மா விரிடி, சூடோமோனாஸ், மெட்டாரைசியம் போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலகத்தை அணுகி ஆதார் அட்டை மற்றும் சிட்டா நகல்களை வழங்கி விதைகள், பூச்சிக்கொல்லி மற்றும் நுண்ணூட்ட பொருட்களை மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story