எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த தி.மு.க. அரசை கண்டித்து வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ஆவின் தலைவருமான வேலழகன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஒன்றிய செயலாளர்கள் டி.சிவா, சீனிவாசன், பிரபாகரன், ராகவன், பாபுஜி, ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இமகிரிபாபு, மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி, நகர அவைத்தலைவர் ஆர்.கே.அன்பு உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.