நாளை புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு


நாளை புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
x

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை கனமழை பெய்தால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படுமா என்று மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் புயல் காரணமாக,சென்னையில் புறநகர் ரெயில்கள் நாளை திங்கள்கிழமை (டிச. 4) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story