பனியன் நிறுவன தொழிலாளி வீட்டில் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை


பனியன் நிறுவன தொழிலாளி வீட்டில் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை
x

அவினாசி அருகே பனியன் நிறுவன தொழிலாளி தனது வீட்டில் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்

அவினாசி அருகே பனியன் நிறுவன தொழிலாளி தனது வீட்டில் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவன தொழிலாளி

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த அணைப்புதூர் எருமைக்காடு தோட்டம் கணபதிசாமி காம்பவுண்டில் வசிப்பவர் ராமர் மகன் ராஜேந்திரன் (வயது 38). இவரும் இவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களது ஒரே மகள் கோவையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது மனைவி தனது மகளைப் பார்க்க கோவைக்கு சென்று விட்டார். ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

தீக்குளித்து தற்கொலை

நேற்று அதிகாலை 5 மணி அளவில் ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. எனவே வீட்டின் மேற்கூறையை பிரித்து உள்ளே பார்த்தபோது ராஜேந்திரன் தீக்காயங்களுடன் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் ராஜேந்திரன் தனது வீட்டு கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் நைலான் கயிறு சுற்றி இருந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். கழுத்தில் நைலான் கயிறு சுற்றி இருந்ததன் காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story