மகா சுடலை காளியம்மன் கோவில் குடமுழுக்கு
பூந்தாழை மகா சுடலை காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது
மயிலாடுதுறை
திருக்கடையூர்:
ஆக்கூர் அருகே பூந்தாழை கிராமத்தில் உள்ள மகா சுடலை காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 21-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று 4-வது கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் ராஜ்மோகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story