சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
திருச்சி
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஆனி மாத மூல நட்சத்திரத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையின் போது மகா சுதர்சன ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. இதில் உலக நன்மை வேண்டியும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் மகா சுதர்சன ஹோமம், கோ பூஜையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story