சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்


சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்
x

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது.

திருச்சி

திருச்சி, தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று தொடங்கி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்கள் நடக்கிறது. தொடக்க நாளான நேற்று உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோ பூஜையும், பின்னர் பால், நெய், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) 10 ஆயிரத்து எட்டு வடை மாலையும், நாளை (சனிக்கிழமை) 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரி மாலையும் அனுமனுக்கு சாற்றப்படுகிறது.


Next Story