போலீசார், வழிபாட்டு குழுவினர் இடையே திடீர் வாக்குவாதம்


போலீசார், வழிபாட்டு குழுவினர் இடையே திடீர் வாக்குவாதம்
x

விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீசார், வழிபாட்டு குழுவினர் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பகுதியில் வழிபாடு நடத்தப்பட்ட 70 விநாயகர் சிலைகளுடன் வழிபாட்டு குழுவினர் மந்தைவெளியில் இருந்து மேள, தாள இசையுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வந்தபோது வழிபாட்டு குழுவினர் சரவெடியை வெடிக்க முயன்ற போது போலீார் அனுமதி மறுத்ததால் வழிபாட்டு குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20 நிமிடம் ஊர்வலத்தை நிறுத்தி வழிபாட்டு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு கோமுகி அணையின் கீழ்பகுதியை சென்றடைந்தது. பின்னர் அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.


Next Story