அரசு கல்லூரி மாணவர்களிடையே திடீர் மோதல் ஒருவர் படுகாயம்


அரசு கல்லூரி மாணவர்களிடையே திடீர் மோதல் ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்களிடையே திடீர் மோதல் ஒருவர் படுகாயம் போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் ரோஷணை மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் பாரதி மகன் விஷால்(வயது 18). இவர் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கல்லூரி முன்பு சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சண்டைபோட்டுக்கொண்டிருந்தனர். இதை விஷால் அருகில் நின்று வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து புள்ளியல் துறை 2-ம் ஆண்டு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து விஷாலை சரமாரியாக தாக்கினர்.

இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விஷாலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து விஷால் கொடுத்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாணவர்கள் மோதல் சம்பவம் கல்லூரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் மோதல் சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story