மொபட்டில் சென்ற தொழிலாளி திடீர் சாவு


மொபட்டில் சென்ற தொழிலாளி திடீர் சாவு
x

ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் சென்ற தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த எம்.எம்.ரெட்டி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 41), கூலித்தொழிலாளி. இவர், நாட்டறம்பள்ளி அருேக புத்துக்கோயில் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்று விட்டு, அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

காவேரிப்பட்டை அடுத்த 5 கண் ரெயில்வே பாலம் அருகே சென்ற போது திடீரென தண்டபாணிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Next Story