டிரைவர் திடீர் சாவு
டிரைவர் திடீரென இறந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் காசி(வயது 40). இவர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காசி அரியலூரில் இருந்து பஸ்சை ஓட்டி வருவதற்காக, பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் அருகே பஸ் சென்றபோது, உடல்நலக்குறைவால் காசி பஸ்சைவிட்டு கீழே இறங்கி, அருகில் உள்ள நிழற்குடையில் படுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அப்பகுதி மக்கள், அவரை எழுப்ப முயன்றபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காசியின் மனைவி பாலவேணி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காசியின் பிரேத பரிசோதனை முடிவில்தான், அவர் எதனால் இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.