வடமாநில தொழிலாளி திடீர் சாவு


வடமாநில தொழிலாளி திடீர் சாவு
x

கூடங்குளத்தில் வடமாநில தொழிலாளி திடீரென இறந்தார்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அணுமின் திட்டப்பணியில் வடமாநிலத்தைச் சார்ந்த பூஷா லோகரா என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவின் காரணமாக கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார். நேற்று காலை அவருடன் தங்கி இருக்கும் நண்பருடன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பூலா லோகரா திடீரென மயங்கினார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story