தொழிலாளி திடீர் சாவு


தொழிலாளி திடீர் சாவு
x

தொழிலாளி திடீர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

விருதுநகர் மாவட்டம், விஸ்வநாதபுரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் கரூர் ரத்தினம் சாலை பகுதியில் மது குடித்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரன் தவறி கீழே விழுந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story