தொழிலாளி திடீர் சாவு
ராஜபாளையம் அருகே தொழிலாளி திடீரென இறந்தார்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள பி.எஸ்.கே. மாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வனராஜ் (வயது 33). தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் வேலை பார்த்த இடத்தில் சம்பளம் வாங்கி வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தனர். இ்ந்தநிலையில் இவர் பிரண்டை குளம் கண்மாய் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story