ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் திடீர் தர்ணா
பணித்தள பொறுப்பாளர்கள் மாற்றத்தை கண்டித்து ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் திடீரெர் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரிஷிவந்தியம்
தர்ணா
ரிஷிவந்தியம் ஒன்றியம் எடுத்தனூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும் முன்னாள் பணித்தள பொறுப்பாளர்களை கண்டித்து எடுத்தனூர் காலனி பகுதி மக்கள் நேற்று காலை 10 மணி அளவில் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாயில் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் தற்போது பணி செய்து வரும் பணித்தள பொறுப்பாளர்கள் ரேணுகா மற்றும் தேவி ஆகியோரை மாற்றாமல் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், முன்னாள் பணித்தள பொறுப்பாளர்கள் தாங்கள் தான் பணி செய்ய உள்ளோம் எனக் கூறி பணிப் பதிவேடுகளை வாங்க கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.
இதை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்றுக்கொண்டதை