எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே நிறுத்தப்பட்ட ரோடு ரோலரில் திடீர் 'தீ'


எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே நிறுத்தப்பட்ட ரோடு ரோலரில் திடீர் தீ
x
தினத்தந்தி 11 July 2023 6:40 PM GMT (Updated: 12 July 2023 11:11 AM GMT)

எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகே நிறுத்தப்பட்ட ரோடு ரோலரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சேலம்

சூரமங்கலம்

சேலம் நெடுஞ்சாலை நகர் வரசக்தி விநாயகர் கோவில் அருகே வசித்து வருபவர் நாராயணன் (வயது 68). இவர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆவார். இதே பகுதியில் தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீடும் உள்ளது. இந்த வீட்டின் அருகே நெடுஞ்சாலை நகர் கங்கை தெருவில் காலி இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒப்பந்ததாரரின் ரோடு ரோலர் வாகனம் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நிலைய அலுவலர் சிராஜ் அல்வினிஷ் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story