அறந்தாங்கி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து
அறந்தாங்கி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை
அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் புதுக்கோட்டை சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. 7½ ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக்கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று குப்பைக்கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கீரமங்கலம் பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story