ஆம்பூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து


ஆம்பூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து
x

ஆம்பூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு நிலக்கரி ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி பச்சகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது லாரியில் ஏற்றப்பட்டிருந்த நிலக்கரியில் திடீரென தீ பற்றியது.

எதிர் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் இதனை கவனித்து சைகை மூலம் லாரி டிரைவருக்கு தெரிவித்தனர்.

உடனடியாக லாரியை நிறுத்திய டிரைவர் இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ முழுமையாக அணைக்கப்பட்டு லாரியை ஓரங்கட்டியப் பின் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.


Next Story