குளித்தலை வனப்பகுதியில் திடீர் தீ விபத்து


குளித்தலை வனப்பகுதியில் திடீர் தீ விபத்து
x

குளித்தலை வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர்

குளித்தலை காவிரி ஆற்றங்கரை ஓரமாக வனத்துறை மூலம் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் குளித்தலை - தண்ணீர்பள்ளி செல்லும் வழியில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வனத்துறைக்கு சொந்தமான யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கும் பகுதியில் கீழே கிடக்கும் காய்ந்த சருகுகள் மற்றும் முட்களில் தீப்பிடித்துள்ளது.

இதைப் பார்த்த வனத்துறையினர் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த சம்பவம் போல அடிக்கடி இப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. யாரோ சில விஷமிகள் வேண்டுமென்றே தொடர்ந்து காய்ந்த சறுகுகளில் தீயை பற்ற வைப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதுபோன்ற நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


Next Story