மின்மாற்றியில் திடீர் தீ விபத்து


மின்மாற்றியில் திடீர் தீ விபத்து
x

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து நடந்தது.

கரூர்

கந்தம்பாளையம் காந்தி நகர் பகுதி தீயணைப்புத் துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மின்மாற்றியில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மின்மாற்றில் எரிந்து கொண்டிருந்த தீயை ரசாயன கலவை பவுடர் மூலம் அனைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்மாற்றியில் இருந்த பழுதை நீக்கி சீரமைத்தனர்.


Related Tags :
Next Story