வீட்டில் திடீர் தீ; பொருட்கள் எரிந்து நாசம்


வீட்டில் திடீர் தீ; பொருட்கள் எரிந்து நாசம்
x

வீட்டில் திடீர் தீ; பொருட்கள் எரிந்து நாசமானது.

திருச்சி

திருச்சி கீழவண்ணாரப்பேட்டை திரு.வி.க.நகரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. இவருடைய தாயார் அதே பகுதியில் இட்லிகடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவருடைய தாயார் வீடு திடீரென தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story