நுண்ணுர செயலாக்க மையத்தில் திடீர் தீ
நுண்ணுர செயலாக்க மையத்தில் திடீர் தீப்பற்றி எரிந்தது.
பொன்மலைப்பட்டி:
திருச்சி கொட்டப்பட்டு ெஜ.ஜெ. நகர் அருகே மாநகராட்சி 46-வது வார்டுக்கு உட்பட்ட நுண்ணுர செயலாக்க மையம் உள்ளது. இங்கு குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும். மேலும் அதே வளாகத்தில் சமீபத்தில் நாய்கள் கருத்தடை சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை இங்குள்ள நுண்ணுர செயலாக்க மையத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. தீ மளமளவென பரவிய நிலையில், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதும், இதில் தரம் பிரித்து வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிந்து நாசம் ஆனதும் தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் யாரும் அங்கு இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இது குறித்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.