தும்பு ஆலையில் திடீர் தீ


தும்பு ஆலையில் திடீர் தீ
x

திசையன்விளை அருகே தும்பு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). இவருக்கு சொந்தமான தும்பு ஆலை, திசையன்விளை அருகே குமாரபுரத்தில் உள்ளது. நேற்று மதியம் இந்த தும்பு ஆலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த தென்னைநெட்டிகள் முழுவதும் தீ மளமளவென்று பரவியது. இதுகுறித்து திசையன்விளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 3 பாம்புகள் கருகி இறந்து கிடந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story