தென்னந்தோப்பில் திடீர் தீ
தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர்
தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவதேவன் (வயது 50). இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இந்தநிலையில், தென்னந்தோப்பில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து சிவதேவன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னந்தோப்பில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அருகாமையில் உள்ள தோட்டங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story