ஓடும் சரக்கு வேனில் திடீர் தீ


ஓடும் சரக்கு வேனில் திடீர் தீ
x

ஓடும் சரக்கு வேனில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியை சேர்ந்தவர் ரகுபதி(வயது 45). இவர் பழைய இரும்பு, பேப்பர், அட்டை போன்ற பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று தனது சரக்கு வேனில் லால்குடிக்கு சென்று அங்கு பழைய இரும்பு பேப்பர், அட்டை உள்ளிட்ட பொருட்களை வாங்கி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு கண்ணுடையான்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். கரையாம்பட்டியில் வந்தபோது சரக்கு வேனின் பின்னால் புகை வருவதை கண்ட ரகுபதி, வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு பார்த்தபோது, சரக்கு வேனின் பின்பக்கம் தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அப்பகுதியில் இருந்த தண்ணீர் வண்டியை வரவழைத்து சரக்கு வேனின் மீது தண்ணீைர ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும் சரக்கு வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. சரக்கு வேனின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வேனில் பழைய டயர், பேப்பர், அட்டை போன்ற பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story