தைலமரக்காட்டில் திடீர் தீ
தைலமரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் - பொற்பதிந்தநல்லூர் சாலைப் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இந்த காட்டில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் தரையில் கிடந்த சருகுகளில் மளமளவென தீ பரவியது. மேலும் மரங்களின் அடிப்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் காடு முழுவதும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீைய கட்டுப்படுத்தினர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.