இறையூர் காட்டில் திடீர் தீ
இறையூர் காப்புக்காட்டில் திடீரென தீ பற்றி எரிந்தது.
திருவண்ணாமலை
செங்கம்
செங்கம் அருகே இறையூர் பகுதியில் காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்புக்காட்டில் மூலிகைச் செடி, அரிய வகை மரங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.
வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் அடிக்கடி காட்டில் சில இடங்களில் தீ வைத்து விடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இறையூர் காப்புக்காட்டில் திடீரென தீ பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காப்புக்காட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story