மாடி வீட்டில் திடீர் தீ


மாடி வீட்டில் திடீர் தீ
x

மாடி வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர்

கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 70). இவரது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் மேல்மாடியில் அறையில் இருந்த பழைய பொருட்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வடிவேல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று மேல்மாடியில் அறையில் உள்ள பழைய பொருட்கள் எரிந்து கொண்டிருந்ததை தண்ணீரை பீய்சி அடித்து தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகாமையில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் மேல் மாடி அறையில் இருந்த பழைய பொருட்கள் எரிந்து நாசம் ஆயின.


Related Tags :
Next Story