தைல மரக்காட்டில் திடீர் தீ


தைல மரக்காட்டில் திடீர் தீ
x

தைல மரக்காட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே துலாரன்குறிச்சி கிராமத்தில் அரசு வனத்துறைக்கு சொந்தமான தைலமரக்காடு உள்ளது. திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலை அருகே உள்ள தைலமரக்காட்டில் நேற்றுமதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஒரு ஏக்கரில் இருந்த தைல மரங்கள் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த தைல மரக்காட்டை பார்வையிட்டனர்.


Related Tags :
Next Story