மூங்கில்துறைப்பட்டு அருகேமலையில் திடீர் தீ


மூங்கில்துறைப்பட்டு அருகேமலையில் திடீர் தீ
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:16:54+05:30)

மூங்கில்துறைப்பட்டு அருகே மலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூரில் மோடங்கல் மலை உள்ளது. இந்த மலை நேற்று மாலை திடீரென மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மூங்கில்துறைப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story