கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு


கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
x

ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கோடை வெயிலில், அக்னி நட்சத்திரத்திலும் பெய்த பலத்த மழையின் காரணமாக படவேடு அருகே 62 அடி உயரமுள்ள செண்பகத்தோப்பு அணையின் கொள்ளளவில் 55 அடி உயரம் வரை நீர் உயர்ந்துள்ளது.

இனிவரும் காலங்களில் மழை பெய்தால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றுப்படுகை பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றங்கரையோர பகுதிகளில் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கமண்டல நாகநதி

இந்தநிலையில் படவேடு பகுதியில் இருந்து கண்ணமங்கலம், வழியாக ஆரணி வரக்கூடிய கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பாசன கால்வாய்களிலும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தண்ணீர் ஆற்றில் வருவதை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.


Related Tags :
Next Story