இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு


இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
x

நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

இலங்கை தமிழர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதையொட்டி நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா எம்.மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 249 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இம்மறுவாழ்வு மையத்தினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திடீர் ஆய்வு மேற்கொண்டு, இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, தமிழக முதல்-அமைச்சரால் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்திற்கு அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்கள் முழுமையாக கிடைக்கின்றதா? என்பதனையும் ஆய்வு செய்தார்.

கோரிக்கைகளை கேட்டறிந்தார்

தொடர்ந்து மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் மக்களிடம் கல்வி உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, குடிநீர் வசதி, அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய் உள்ளிட்ட குடிமைப்பொருட்கள் முறையாக தங்கு தடையின்றி கிடைக்கின்றதா? என்பதனையும் அமைச்சர் கேட்டறிந்தார். முன்னதாக அவர் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் எம்.மேட்டுப்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தினை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து சமத்துவபுரம் கலையரங்கத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, மோகனூர் தாசில்தார் ஜானகி, தனிதாசில்தார் (இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம்) சாகுல் ஹமிது உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story