தொழிற்சாலைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு


தொழிற்சாலைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகளில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

சாத்தூர்.

சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் நேற்று குழந்தை தொழிலாளர் கொத்தடிமை முறை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அனிதா, சிந்தப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் ரைஸ் மில் மற்றும் தனியார் பேப்பர் போர்டு ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பணியின் தன்மை குறித்தும், தொழிலாளர்களின் விவரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜாஜெய்சிங், சிவகாசி தொழிலாளர் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவன அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story