கர்ப்பிணி திடீர் சாவு


கர்ப்பிணி திடீர் சாவு
x

விருத்தாசலம் அருகே கர்ப்பிணி திடீர் சாவு குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடலூர்

கம்மாபுரம்

விருத்தாசலம் அடுத்த இருப்புகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சவரிமுத்து. இவருடைய மனைவி அனிதாஜோஸ்வி(23). இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 மாத கர்ப்பிணியான அனிதாஜோஸ்விக்கு கருவானது கருப்பையில் உருவாகாமல் கருப்பை குழாயில் உருவானதால் இதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனிதாஜோஸ்விக்கு உடல் நிலை மோசமானதை அடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக உறவினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் பெரியநாயகமேரி கொடுத்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அனிதாஜோஸ்விக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆவதால் அவரது சாவுக்கான காரணம் குறித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் லூர்துசாமி விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story