கர்ப்பிணி திடீர் சாவு


கர்ப்பிணி திடீர் சாவு
x

தோகைமலை அருகே கர்ப்பிணி உடல் நல குறைவால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

உடல்நிலை பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள மேட்டுகளத்தூரை சேர்ந்தவர் அம்சநாயகம் மகன் மணிவேல் (வயது 34). இவருக்கும், கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை வடக்கு தெருவை சேர்ந்த முத்துக்கருப்பன் மகள் பிரேமாவுக்கும் (26) திருமணமாகி உள்ளது. இந்தநிலையில் பிரேமாவுக்கு உடல்நிலையில் (கிட்னி) பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் பிரேமா கர்ப்பமானார். இதனால் குஜிலியம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கர்ப்பிணி சாவு

இதற்கிடையில் நேற்று முன்தினம் தனது தாய் வீடான ஆர்.டி.மலைக்கு பிரேமா வந்துள்ளார். இந்தநிலையில் அன்று மாலை பிரேமாவிற்கு கடுமையான வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேமாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிரேமாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பிரேமாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story