பொதுமக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்


பொதுமக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:47 PM GMT)

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் திடீரென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் திடீரென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் 2-வது தெருவில் புதிதாக இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த அரங்கத்தில் நேற்று வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீரென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தரமாக அமைக்க வேண்டும்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் மரப்பலகையிலான தரைதளம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதில் தரையின் மேல் மரக்கட்டைகள் மட்டும் பரப்பி அதன்மேல் பலகையை விரித்து தளம் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு தரையில் பலகை விரித்து ரன்னர் பலகையும், ராடும் பதிக்காமல் வெறும் பலகையை மட்டும் பதித்து தரைதளம் அமைத்தால் இங்கு இறகுபந்து பயிற்சி பெறும் மாணவ-மாணவிகள் மற்றும் இறகு பந்து விளையாடும் வீரர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்.

எனவே தற்போது நடைபெறும் வேலையை நிறுத்தி விட்டு, தரமான முறையில் தரைதளம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story