தஞ்சையில் 'திடீர்' மழை
தஞ்சையில் 'திடீர்' மழை பெய்தது.
தஞ்சையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் மேகம் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து 4 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழையால் பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். பலர் மழையில் நனைந்தபடியும், சில மாணவர்கள் ஆட்டோவிலும் சென்றனர். தஞ்சை-நாகை சாலையில் மழைநீர் வடிகால் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சாலை சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் காட்சியளித்தது. மழையால் இரவில் குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire