நெல்லையில் திடீர் மழை


நெல்லையில் திடீர் மழை
x

நெல்லையில் திடீரென்று மழை பெய்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் வெயில் வழக்கம் போல் சுட்டெரித்தது. மாலையில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாளையங்கோட்டை தியாகராஜநகர், ஐகிரவுண்டு பகுதி, கே.டி.சி. நகர் உள்ளிட்ட இடங்களில் ½ மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story