புதுக்கோட்டையில் திடீர் மழை


புதுக்கோட்டையில் திடீர் மழை
x

புதுக்கோட்டையில் திடீர் மழை பெய்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்தது. மேலும் இடி, மின்னலும் பலமாக இருந்தது. காற்றும் சற்று அதிகமாக வீசியது. இதில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.


Related Tags :
Next Story