செஞ்சியில் திடீர் மழை


செஞ்சியில் திடீர் மழை
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:46 PM GMT)

செஞ்சியில் திடீர் மழை பெய்தது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. இதனால் அனல் காற்று தாங்க முடியாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து முடங்கிக் கிடத்தனர். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மதியம் 3 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில் செஞ்சியில் அமைக்கப்படும் புறவழிச்சாலை மேல்களவாய் சாலை குறுக்கு பாதையில் மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற மாணவ-மாணவிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதியடைந்தனர்.


Next Story