தஞ்சையில் திடீர் மழை


தஞ்சையில் திடீர் மழை
x

தஞ்சையில் திடீர் மழை

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.கோடை வெயிலை போன்று வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே வெயில் கொளுத்தியது. மதியத்துக்குப்பிறகு வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழை கொட்டியது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென மழை பெய்ததால் வெளியே சென்று இருந்தவர்கள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர். இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் நாஞ்சிக்ே்காட்டை பகுதிகளிலும், வல்லம் பகுதிகளிலும் மழை பெய்தது. பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும் மழை ெபய்தது.


Related Tags :
Next Story