வேலூரில் திடீர் மழை


வேலூரில் திடீர் மழை
x

வேலூரில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.

வேலூர்

வேலூரில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.

வேலூர் மாவட்டத்தில் வெயில் கோடைகாலத்தை போன்று சுட்டெரித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மேகமூட்டமாக காணப்பட்டன. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கின.

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. அதைத் தொடர்ந்து சாரல் மழை அவ்வப்போது பெய்தது.

சாலையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையினால் பூமியின் வெப்பம் சற்று தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் கணியம்பாடி, நஞ்சுண்டாபுரம், நாகநதி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகநதி ஆற்றில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது கிராம மக்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நாகநதி ஆற்றை கடந்து சென்றனர்.

நாகநதி ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நாகநதி ஆற்றைக் கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story