வேலூரில் திடீர் மழை
வேலூரில் பெய்த திடீர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர்.
வேலூர்
வேலூரில் பெய்த திடீர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. வேலூரில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னல் காற்று இன்றி 30 நிமிடங்களுக்கு மேலாக மழை வேகமாக கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் மிதமாக மழை பெய்தது.
திடீர் மழையினால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. அதைத்தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. சிறிதுநேரம் மட்டுமே மழை பெய்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.