நொய்யல் ரெயில்வே கேட் திடீர் பழுது


நொய்யல் ரெயில்வே கேட் திடீர் பழுது
x

நொய்யல் ரெயில்வே கேட் திடீரென பழுது அடைந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

ரெயில்வே கேட் பழுது

கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக ெரயில்வே இருப்புப் பாதை செல்கிறது. இதன் வழியாக சென்னை, திருச்சி, கரூர், நாகர்கோவில், நெல்லை, ஈரோடு, கோவை, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிவிரைவு ெரயில்களும், சாதாரண ெரயில்களும், பல்வேறு வகையான சரக்கு ெரயில்களும் சென்று வருகின்றன. ெரயில்கள் வரும் முன்பு நொய்யலில் தார் சாலையின் குறுக்கே உள்ள 2 ெரயில்வே கேட்களும் மூடப்படும். ெரயில்கள் சென்ற பிறகு சில நிமிடங்களில் சிக்னல் கிடைத்தவுடன் மீண்டும் ெரயில்வே கேட் திறக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் செல்லும். இந்நிலையில் நேற்று காலை சுமார் 8.30 மணிக்கு மேல் அந்த வழியாக ெரயில் வந்தபோது ெரயில்வே கேட் மூடப்பட்டது. ெரயில் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் ெரயில்வே கேட்டை திறந்தபோது 2 ெரயில்வே கேட்களும் பழுதடைந்ததால் திறக்க முடியவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக நேற்று காலை 8.30 மணி முதல் பகல் சுமார் 12 மணி வரை கோவை, ஈரோடு, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரெயில்வே கேட் பழுதை சீர் செய்தனர். இதையடுத்து 3½ மணி நேரத்திற்கு பிறகு ரெயில்வே கேட் வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story