3-வது மின்இழுவை ரெயிலில் திடீர் பழுது


3-வது மின்இழுவை ரெயிலில் திடீர் பழுது
x

பழனி முருகன் கோவிலில், 3-வது மின்இழுவை ரெயில் திடீரென பழுதானது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய சேவைகளும் உள்ளன. தற்போது ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணி நடந்து வருவதால், அதன் சேவை கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் மின்இழுவை ரெயில்நிலையத்தில், 3-வது மின்இழுவை ரெயிலில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் அதில் பக்தர்கள் செல்ல முடியவில்லை. நேற்று மாத கார்த்திகை உற்சவம் என்பதால், ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். இவ்வாறு வந்த பக்தர்கள், 2 மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வந்ததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 3-வது மின்இழுவை ரெயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பராமரிப்பு பணி நடைறெ்றது. தற்போது திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. எனவே மின்இழுவை ரெயிலில் பராமரிப்பு பணிகளை முறையாக முடிக்க வேண்டும். இதுமட்டுமின்றி ரோப்கார் பராமரிப்பு பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.


Next Story